Saturday, June 25, 2005

திரைப்படங்களுக்கு WHO சான்றிதழ்

சமுதாயத்தை கெடுக்கும் வகையில் திரைப்படங்களில் இடம்பெறும் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, மேலும் சமுதாயம் சீர்பட, மேலும் சில தடை யோசனைகள்:

- இனி திரைப்படங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை, பிக்பாக்கெட், லஞ்சம், கந்துவட்டி, சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு தடை

- திரைப்படங்களில் இனி வன்முறையை வளர்க்கும் ஆயுதங்கள்- பிலேடு, சைக்கிள் செயின், அருவாள், துப்பாக்கி போன்றவைக்கு தடை

- வன்முறையை தூண்டும் கதாபாத்திரங்கள், முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்துக்கு தடை

- ஃபாஸ்ட் ஃபுட், சுவீட், எண்ணை பதார்த்தங்கள், கோக் வகையறாக்கள், போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை திரையில் காட்ட தடை

- இனி கொடுமை செய்யும் மாமியார் மற்றும் கணவர், ஈவ் டீஸிங் காட்சிகள், சாலைவிதியை மீறும் காட்சிகள், பொய் சொல்லும் கதாபாத்திரங்கள் போன்றவை இடம்பெறக்கூடாது.

- கெட்ட வார்த்தைகள், அவமரியாதைச் சொற்கள்- "நீ, வா, போ, டேய், வாடா, வாடி, போடி," போன்ற ஒற்றைப்பட சொற்களுக்கு தடை

- இயற்கை மற்றும் பௌதீக விதிகளை மீறும் காட்சிகளுக்கு தடை

- உடற்பயிற்சி, யோகா, மெடிடேஷன், போன்ற காட்சிகள் கட்டாயம் இடம்பெறவேண்டும்

- இந்திய சென்ஸார் போர்ட் சான்றிதழைத் தவிர, உலக சுகாதாரக் குழுமத்தின் சான்றிதழையும் ஒவ்வோரு திரைப்படமும் பெற வேண்டும்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger குமரேஸ் said...

எத்தனை செக்கனுக்கு திரைப்படம் ஓடும் என்று சொல்லவேயில்ல

12:46 PM  
Blogger அதிரைக்காரன் said...

This comment has been removed by a blog administrator.

1:01 PM  
Blogger அதிரைக்காரன் said...

இத்தனை கண்டிசனுக்கும் ஒப்புக் கொண்டு எனக்குத் தெரிந்து ஒரே ஒரு சினிமா மட்டும்தான் இருக்கு. பெயர் 'காந்தி'

//உடற்பயிற்சி, யோகா, மெடிடேஷன், போன்ற காட்சிகள் கட்டாயம் இடம்பெறவேண்டும்//

கண்டிப்பா வச்சிடலாம். ஆனா கதாநாயகி டைட் டிரஸ் அல்லது டூ பீஸ்லதான் இத செய்வாங்க. OK யா?

1:02 PM  
Blogger Indianstockpickr said...

குமரெஸ்- படம் பெட்டியைவிட்டு வெளியே வருதானு மொதல்ல பார்ப்போம்!

ஆதிரைக்காரரே....காந்தி படம் கூட தேறுமானு தெரியல...

//கண்டிப்பா வச்சிடலாம். ஆனா கதாநாயகி டைட் டிரஸ் அல்லது டூ பீஸ்லதான் இத செய்வாங்க. OK யா?//

அப்ப ஒகே:-))

1:31 PM  

Post a Comment

<< Home

Counter