Saturday, January 15, 2005

காஞ்சி வழக்கு

தின வாந்தி
(நடுநிலை நாளேடு)

காஞ்சி வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

எமது விசேட நிருபர்

Chennai 15 Jan. உச்சநீதிமன்றம் காஞ்சி வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அந்த மேல்முறையீட்டில் கூறியிருப்பதாவது:

1. ஜெயேந்திரர் இந்தியாவிலேயே இருக்கக்கூடாது. அவரை நேபாலத்துக்கு அனுப்ப வேண்டும். அரசு ஹெலிகாப்டரில் அவரை நேபாலம் அனுப்ப உதவிகள் செய்துதர தயாராக உள்ளோம்.

2. ஜெயேந்திரர் வழக்கு முடியும்வரை மெளனவிரதம் காக்க வேண்டும். இல்லையெனில், அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும்.

3. ஜெயேந்திரர் பூஜைகள் செய்யகூடாது. பூஜைகள் செய்து அவர் ஏதேனும் மாயையால் வழக்கை திசைதிருப்பக்கூடும்.

4. சட்டம் அனைவருக்கும்பொது என்பதால், தற்சமயத்தில் ஜாமீனில் இருக்கும் தமிழகத்திலுள்ள 2,12,276 பேர்களை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. தேவையெனில், இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலா உதவித்தொகை அளிக்கவும் அரசு தயார்.

5. உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து "ஜாமீன்" என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


கடைசி செய்திகள்:

-அரசு தரப்பில் வாதாடிய கே டி எஸ் துளசி மீது மானநஷ்ட வழக்கு தொடர தமிழக அரசு முடிவு.

- ஜெயேந்திரர் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சமஸ்கிரதத்திற்கு மாற்ற வேண்டும் - பா ஜ க கோரிக்கை
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Counter