Friday, February 04, 2005

Pets Cellphone

அப்தாப் அஹமத் கோர்ட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது A14 நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிச்சல். அன்று தான் அவரது மோசடி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. நீதிபதி காரலின் லட்லோ'விடம் அஹமதின் காலதாமதத்தின் காரணத்தை அவரின் வக்கீல் தெரிவித்தார். வழக்கை ஒத்திபோடாமல், கோர்டிலிருந்து அஹமதை மொபைல் தொலைபேசியில் தொடர்ப்புகொண்டு தீர்ப்பை தொலைபேசியிலேயே கூறினார் (சமூகச் சேவை செய்யும்படியும், கட்டண அபரதமும் தண்டனையாக வழங்கப்பட்டது.) வழக்கு முடிந்தது. கோர்ட்டின் நேரமும் மிச்சம், அனாவசியமான செலவும் மிச்சம். இது நடந்தது இங்கிலாந்தில் உள்ள இப்ஸ்விச் நகர நீதிமன்றத்தில்.

நமது நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளில் பல்வேறு காரணங்களை காட்டி தேவையில்லமல் வாய்தாவும், ஒத்திவைப்பும் நடைபெறுகின்றன. சமீபத்தில் ஜெயேந்திரர் வழக்கில் கேமரா தொலைபேசிமூலம் விசாரணை நடந்ததாக படித்த ஞாபகம். பல வழக்குகளில் இத்தகைய வழிகள்மூலம் விசாரணையை துரிதப்படுத்தினால், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிக்கமுடியலாம்.

மொபைல் தொலைபேசியின் தாக்கம் இப்பொழுது பெரிதும் பெருகிவிட்டது. குரங்கு கையில் பூமாலை என்ற வகையில் டெல்லி மாணவன் அடித்த கூத்தை சமீபத்தில் பார்த்தோம். Petsmobility என்ற நிறுவனம் வளர்ப்பு பிராணிகளின் கழுத்துப்பட்டையில் தொங்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் உண்டாகும் நன்மைகளை இந்த சுட்டி சுவாரசியமாக விளக்குகிறது. வாழ்வுதான்!









Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Counter