Thursday, February 10, 2005

IKEA mania

மூன்று புக் ஷெல்ஃப், ஒரு டெஸ்க், என் மகளின் பெட்: இவை அனைத்தையும் என் காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி பயணம். இது சாத்தியமில்லை என சிலர் எண்ணக்கூடும். சத்தியமான உண்மை! பிரிட்டனில் உள்ள குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் நான் ஐகியா'விலிருந்து இந்த பொருட்களை வாங்கி வருகிறேன் என்று!



வீட்டை அழகு செய்ய குறைந்த விலையில், அதே சமயம் ஸ்டைலாகவும் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டுமா... ஐகியா (IKEA) இருக்க பயமேன்! ஐகியா கடையில் வீட்டுப் பொருட்களை வாங்குவது ஒரு புதுவிதமான அனுபவம்! இங்கு எல்லாமே நாம்தான். உள்ளே சென்றதும் கையில் ஒரு பென்சிலும் இன்ச் டேப்பும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக (நம்மை போலவே) பலரும் இன்ச் டேப் சகிதமாக சுற்றிக்கொண்டிருப்பர். காட்சியில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களின் விலை சீட்டில் அந்தந்த பொருளை நாம் எடுக்க வேண்டிய இடத்தின் குறிப்பு இருக்கும். கடை முழுதும் இதே வழிமுறைதான். தேவையான பொருட்களின் இருப்பிடங்களை குறிப்பு எடுத்தபின், கடையின் இறுதியில் உள்ள கோடவுனில் நாமே அந்தந்த பொருட்களை ட்ராலியில் ஏற்றிக்கொண்டு பணம் செலுத்தியபின் காரில் ஏற்றிக்கொண்டு வரவேண்டியதுதான். அனைத்து பொருள்களும் தட்டையாக மடக்கிவைத்தே (flatpack) விற்கப்படுவதால் காரில் போட்டு எடுத்துவர மிகவும் சுலபம்.

இந்த ஐகியாமேனியாவை துவக்கியவர் இங்வார் காம்ப்ராட் என்பவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். பால்காரனாக வாழ்கையைத் தொடங்கி, 1943'ல் ஸ்டாக்ஹோமில் ஐகியாவை துவங்கினார். தற்பொழுது 31 நாடுகளில் 186 கிளைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஐரோப்பவின் 10% சதவிகித மக்கள் உறங்குவது ஐகியா கட்டில்களில்தான். ஐகியாவின் பொருள் அட்டவணை புத்தகம் பைபிளை காட்டிலும் பெருவாரியான ஐரோப்ப மக்களின் வீட்டில் இருக்கிறது! ஐகியாவின் நிறுவனர் காம்ப்ராட்தான் 2004'ல் உலகிலேயே பணம் படைத்தவர் என்ற பேச்சும் எழுந்தது. இருப்பினும், 78 வயதான இவர் இன்றும் பந்தா இல்லாமல், அரசுப் பேருந்தில்தான் பயணம் செய்கிறாராம்!

ஞாயிற்றுக்கிழமையிலும் திநகர் ரங்கநாதன் தெருபோல் காட்சியளிக்கும் ஐகியா கடை, லண்டணில் புதிதாகத் துவக்கிய கடையை நேற்று முப்பதே நிமிடத்தில் மூடிவிட்டது!! காரணம்: முதல்நாள் தள்ளுபடி விற்பனையில் ஏற்பட்ட நெரிசலில் ஐந்துபேர் காயமடைந்து மருத்துவமனை செல்ல நேர்ந்ததால்தான்! காயமடைந்தவர்களை flatpack'ஆக எடுத்துச் சென்றிருக்காமல் இருந்தால் சரி!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger Vijayakumar said...

ஐகியா பற்றிய தகவலுக்கு நன்றி இரவி. சிங்கப்பூரிலும் ஒரு ஐகியா இருக்கிறது.அங்கு எதுவும் வாங்கவில்லையென்றாலும் என்னுடைய பேவரைட் கடை. அங்கு சென்று சென்று தான் என்னுடைய கனவு இல்லத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

1:02 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

in the IKEA here in Canada, they sell Lakshmi padam. go figure. :)

3:55 AM  
Blogger Indianstockpickr said...

விஜய், உங்கள் கனவு மெய்ப்படவேண்டும்! ஜன்னல் வழி ஷாபிங்'லும் ஒரு கிக் இருக்கத்தானே செய்கிறது!

மதி...என்னது லஷ்மி படமா... பேர் என்ன வச்சிருக்கானுவ.. ஏதெனும் படம் இருந்தால் வலையேற்றுங்கள். பார்க்க ஆவல்!

8:29 AM  
Blogger meenamuthu said...

இங்கு 'ஒன் உத்தாமா' என்ற பெரீய ஷாப்பிங் சென்டரில் ஒரு பகுதியில்
இருந்த 'ஐகியா'தனக்கென்று தனியிடத்தில் வியாபாரத்தைத்
தொடங்கி உச்சத்தில் இருக்கிறது!எந்த நேரமும் திருவிழாக் கூட்டம்தான்!
அதிலும் அந்தவருடத்திற்குறிய ஐகியா மேகஸின் வெளியானதும்
பார்க்கணும் கூட்டத்தை!

நம் வீட்டில் உள்ள பொருள்களில் தனியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும்
ஐகியாவின் பொருள்கள்!குறிப்பாக அதன் கலர்கள்!கேண்டில் லைட்டுகள்,
கப்புகள்,எங்கே வேண்டுமானாலும்(நாமே பொருத்திக் கொள்கிறார்ப் போல்
உள்ள வித விதமான லைட்டுகள்!(என்வீட்டிலும் எக்க சக்கம் அதில்
எல்லாவற்றையும் வாங்கிவந்து நாமே பூட்டுவது ரொம்ப இன்ட்றஸ்டிங்கான
விஷயம்.

10:21 AM  
Blogger அபுல் கலாம் ஆசாத் said...

இனிய இரவிக்குமார்,

ஐகியா ஷோரூம் ஜித்தாவில் (சவூதி அரேபியா) திறந்த அன்று கூட்ட நெரிசலில் ஒருவர் நசுங்கி உயிரிழந்தார்.

ஐகியா வின் விற்பனை உரிமை துபாய்க்கு வந்தபோது அதற்காகப் படங்கள் வரைந்து செயலியை எழுதிய கணினி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு உண்டானது.

பிறகு, ஜித்தாவில் ஐகியாவிற்கான ஷோரூமில் கூட்ஸ் லிஃப்ட்டுகள் வடிவமைத்ததிலும், அவர்களின் ட்ராலியின் ஆங்கிளோடு எங்கள் 'மூவிங் வாக்'கின் ஆங்கிள் பொருந்துமா எனப் பார்த்ததிலும் ஐகியாவோடு எனக்கு சிறிய தொடர்பு உண்டு.

உங்கள் வலைப்பதிவைப் படிக்கையில் மகிழ்வாக இருக்கிறது.

அன்புடன்
ஆசாத்

3:51 PM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

ஐகியா USAவிலும் இருக்குதுங்க.. (My Favorite place.. some time to buy.. some time just to see the way they organised the home items)

11:53 PM  

Post a Comment

<< Home

Counter