புதுசு கண்ணா புதுசு

புதுப்பொலிவுடன் மலர்ந்திருக்கிறது சென்னை அரசுப் பொது மருத்துவமனை. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு முன்னேற்றம். ஒரு மருத்துவமனை சரிவர இயங்குவதிற்கு சுத்தமான சூழல் இன்றியமையாதது. துவக்கவிழாவன்று இருக்கும் நிலையைப்போல் இனிவரும் காலங்களில் இதனை பராமரிக்கும் கடமை அரசுக்குள்ளது.
அரசு மருத்துவமனைகளின் தலையாய கடமை ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வதும், மருத்துவபடிப்புக்கு உதவியாக இருப்பதும். ஆனால், அரசு மருத்துவமனைகளில், முக்கியமாக சென்னை பொதுமருத்துவமனையில் அனைத்து மருத்துவபிரிவுகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் நுட்பமான மருத்துவர்கள் உள்ளனர். இவர்களின் அனுபவத்தை சரியாக பயன்படுத்தி, புதியதாக கட்டப்பட்டுள்ள, பணம் கொடுத்து இயங்கும் பிரிவுகளில் ஏழை அல்லாதோருக்கு தரம்வாய்ந்த சேவை அளித்து, அதில் வரும் வருமானத்தை, மற்ற இலவச சேவைகளில் பயன்படுத்தலாம். இந்தவகையில், பிரிட்டனில் உள்ள National Health Service செய்யும் சேவைகளை காணும்போது, இதை ஒரு முக்கிய விடயமாக நம் அரசு மருத்துவமனைகளும் செய்தால், பயன் இன்னும் அதிகமாகும். இதை சரிவர செய்தால், மற்ற தனியார் மருத்துவமனைக்கு நிகரான, ஏன், அதைவிட சிறப்பான தரத்தை, சற்றே குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்க முடியும். செய்வார்களா, பொறுத்திருந்து பார்ப்போம்.
3 Comments:
// மற்ற தனியார் மருத்துவமனைக்கு நிகரான, ஏன், அதைவிட சிறப்பான தரத்தை, சற்றே குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்க முடியும். செய்வார்களா //
எங்க ஊர்ல எல்லாம் அரசு மருத்துவர்கள் தான் பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளின் உரிமையாளர்கள்......... இதற்கு என்ன சொல்றீங்க.....ரமணா ஸ்டைலில் யாராச்சும் வந்தாத்தான் இந்த விஷயங்கள் எல்லாம் நேராகும்
pls visit and give ur feedback
http://www.peacetrain.blogspot.com/
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
Post a Comment
<< Home