Blog O..Blog.
2004ம் வருடத்தில் வலையில் அதிகமாக தேடப்பட்ட ஆங்கிலச்சொல் "Blog" !! Merriam-Webster என்ற அகராதி பதிப்பாளர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. இந்த அகராதிப்படி, Blog என்ற சொல்லின் பொருள்:
BLOG: noun [short for Weblog] (1999) : a Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by the writer
ஏற்கனவே "BLOG" சில Oxford அகராதிப் பிரிவுகளில் இடம் பிடித்துவிட்டது.
(ஏதாவது தமிழ் அகராதியில் "வலைப்பதிவு" என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறதா???)
உலக அளவில், 5 மில்லியன் வலைப்பதிவுகள் (Blogosphere) இருக்குமெனவும், ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒரு வலைப்பதிவு உருப்பெறுகிறது என்ற புள்ளிவிவரங்கள் வியக்கவைக்கிறது. தமிழ் வலைப்பதிவுகள் பெருமளவில் பெருகியதும் கடந்த ஆண்டில்தான். இத்தனை வலைப்பதிவுகள் இருப்பினும், தொடர்ச்சியாக செயல்பட்டுவருகின்றவை நான்கில் ஒரு பங்கு வலைப்பதிவுகள்தான். பெரும்பாலானவை தவனைமுறையில் புதுப்பிக்கப்படுபவை (என்னையும் சேர்த்து!! சோம்பேரித்ததனம்/ நேரமின்மை... போன்ற சாக்குகளை நான் கூறினாலும்... சட்டியில் இருந்தால்தான்... என்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறது!)
ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக பதிந்தாலும், தமிழில் எழுதுவதே என்னை பொருத்த அளவில் ஒரு கிக்கைத் தருகிறது. நான் கடந்த மூன்று நான்கு மாதங்களாக வலைமேய்ந்தும் அவ்வப்போது வலைப்பதிந்தும் வருகிறேன். முகம் தெரியாத பலரின் எண்ணங்களை, உணர்ச்சிகளை, மொழிப்பற்றை, விருப்புவெறுப்புகளை, என் இருக்கையில் அமர்ந்தபடியே உணர்வதின் அருமை, என்போன்ற வலைமேய்பவர்களுக்கு புரியும். முக்கியமாக எனக்குத்தெரியாத பலவிஷயங்களை பல்வேறு கோணங்களில் பலர் அணுகுவதை படிக்கும்போது, சே... எனக்கு இது தோணாம போச்சே எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தமிழ் வார்த்தையை கற்றுக்கொண்டு வருகிறேன் (நண்பர் பிகேசி க்கும் இதில் முக்கிய பங்குண்டு!)
இப்படிபல நல்ல விடயங்கள் இருந்தாலும், ஒரு சிந்திக்கும் சமுதாயத்தில் எற்படும் ஒருசில கருத்துவேறுபாடுகள் நம் வலைப்பதிவுகளிலும் தென்படுகிறது (சற்று மிகையாகவே). தனிநபர்கள் மீதும், குறிப்பாக சாதிரீதியான வாதங்களிலும் இது அமைவது சற்று வருத்தம் அளித்தாலும், இது தவிர்க்கமுடியாத ஒன்று என நினைக்கிறேன் ???
வலைப்பதிவுகளின் தாக்கம், படிக்கும்/எழுதும் வட்டத்தையும் தாண்டி பல்லாயிரம் மக்களை அடைந்ததற்கு சமீபத்திய உதாரணம்: சுனாமி. நம் சகவலைபதிவாளர்கள் பலர் இதில் ஆற்றிய சேவைக்கு என் சல்யூட்!அமெரிக்காவில், கடந்த தேர்தலின்போது வலைப்பதிவுகள் சக்கைபோடுபோட்டது நாம் அறிந்ததே. இன்று BBC 5Live வானொலி நிகழ்ச்சியில் Waterstones என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஜோ கார்டன் என்பவரை அவரின் Blog காரணமாக வேலைநீக்கம் செய்யப்பட்டதைபற்றி விவாதித்தார்கள். இப்படியும் நடக்குமா என்று நினைத்து வலையில் தேடுகையில், இந்தசில விஷயங்கள் தென்பட்டன:
http://seattlepi.nwsource.com/business/146115_blogger30.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3955913.stm
அய்யா.... வலைப்பதிவது முக்கியம்தான்....ஆனா...வேலை....என் பாஸ் வரா மாதிரி தெரியுது....
உடு ஜுட்!!

1 Comments:
//ஏதாவது தமிழ் அகராதியில் "வலைப்பதிவு" என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறதா???)//
We are yet finalise on valaippadhivu / valaippoo / valaikkurippu / valai arippu!
Post a Comment
<< Home