Tuesday, January 11, 2005

காப்புரிமைச் சட்டத்திருத்தம்

கடந்த மாத இறுதியில் இந்திய காப்புரிமை சட்டத்திருத்தம் ஒரு அவசரச் சட்டமாக (ordinance) கொண்டுவரப்பட்டுள்ளது. 1994 இறுதியில் உலக வியாபாரக் குழுமத்தில் (WTO) இந்தியா TRIPS (Trade-related Aspects of Intellectual Property Rights) ஒப்பந்ததில் கையெழுத்திட்டது. இதனை செயல்படுத்த பத்து ஆண்டு அவகாசம் கொடுக்கப்பட்டு, இக்கால அவகாசம் சென்ற ஆண்டு இறுதியோடு முடிவடைந்தபடியால், அவசர அவசரமாக இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதால், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் இதனை விவாதிக்காமல் அவசர சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முழு விவாதம் நடக்கும். இதனை இடதுசாரி கட்சிகள் மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறி.

இதுவரை இருந்த இந்திய காப்புரிமைச் சட்டம் (Indian Patent Act 1970) பொருள் காப்புரிமையாக (product patent) இல்லாமல், செய்முறை காப்புரிமையாக (process patent) இருந்தது. எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிநாட்டில் தயாராகும் பந்நாட்டு நிறுவனங்களின் மருந்துகளை செய்முறை மாற்றி generic வகையில் காப்பியடித்துவந்தனர். இதனால், மருந்துகள் குறைந்த விலையில் நம் நாட்டு மக்களுக்கும், மிகமுக்கியமாக, பிற வளரும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன. புதிய சட்டத்தால், இனி இவ்வகையான தயாரிப்புகள் செய்ய இயலாது. தற்பொழுது நிலவையில் இருக்கும் 97% மருந்துகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. என்வே, உடனடியாக மருந்துகளின் விலையில் மாற்றமிருக்காது. இனிவரும் ஆண்டுகளில், புதிய மருந்துகளின் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது. (ஆனாலும், அத்தியாவசியமான மருந்துகளின் விலையை அரசின் ஒப்புதலுடந்தான் நிர்ணயிக்கமுடியும்).

இச்சட்டத்திருத்தம் யாரை பாதிக்கும்? ஆய்வுப் பிரிவுகள் ஏதுமில்லாமல் generic வகையில் மட்டுமே மருந்துகளை தயாரித்துவரும் நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கபட வாய்ப்புள்ளது. மேலும், புதிய சட்டம், மருந்துகளைத்தவிர, உணவு/விவசாய ரசாயனச் சோதனைப் பொருட்கள், நுண்ணுயிர்பிரிவு சோதனை பொருட்கள், மரபணுச் சோதனைப் பொருட்கள் போன்றவற்றுக்கும் பொருந்துவதால், இப்பிரிவுசார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். அதேவகையில், நம் நாட்டில் அறிவியல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்துவதின்மூலம் புதிய காப்புரிமை பெரும் நிறுவனங்கள் செழிக்கக்கூடும். பாதிப்பு சிறிதெனினும், வரும் ஆண்டுகளில், மருந்துகளின் விலையேற்றத்தால் அதிக பாதிப்புக்குள்ளாவோர் வசதியற்ற பாமரமக்களே. இதுவரை generic முறையில் இந்தியாவில் தயாரித்த மருந்துகளை பிற வசதியற்ற நாடுகள் குறைந்த விலையில் பெற்று வந்தன. இனி புதிய மருந்துகளை இவ்வாறு அவர்கள் பெற இயலாது. மற்றுமொரு வகையில் இதுவும் வளரும் நாடுகள் செய்யும் economic apaartheid தான்.

மேலதிக விவாதங்களுக்கு இங்கே செல்லலாம்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger Balaji-Paari said...

Dear Ravikumar,
Thanks for the blog. Indeed I assume that it is having significant not only on the medicines but also on the other products.
"Economic appartheid" a perfect description.

8:57 PM  
Blogger Ram said...

Dear Ravi Kumar,

I came across your interesting blog, while on Google. I am a Tamil Iyer, but cannot read or write Tamil. Would like to know about what you wrote about medicines and about the mention of my blog.

12:12 PM  
Blogger hagleycabral said...

A new stainless watches watch from Tioga (Tioga), the new
› titanium-watch titanium ore › titanium-watch Find the perfect luxury watch from titanium strength Tioga. Tioga 온라인 바카라 Watches and Personalised titanium earring posts Wear with your phone, tablet or watch from our titanium rings range of watches.

5:26 PM  

Post a Comment

<< Home

Counter