Thursday, September 30, 2004

விளம்பரங்களும் விபரீதங்களும்

ரொம்ப நாளைக்கு பிறகு இந்திய விளம்பரங்களை சன் டிவியில் பார்த்த போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சில விளம்பரங்களின் தரம் சர்வதேச தரத்தில் இருந்தாலும், பொதுவாக எனக்கு கிடைத்தது ஏமாற்றம் தான். இன்னும் ஆதி கால விளம்பரங்கள் பல, அப்டேட் செய்யப்படாமல் உலா வந்து கொண்டு இருக்கின்றன (உதா: வீக்கோ வஜ்ரதந்தி, நிஜாம் பாக்கு போன்றவை)

ஆதிலும், இந்த நிஜாம் பாக்கு கொஞ்சம் ஓவர் தான்! எல்லா வயதினரும் சுவைக்கும் பாக்கு எனற அவர்களின் கூற்று வருந்தத்தக்கது. குழந்தைகளும் சுவைக்கும் பாக்கு என்பது மருத்தவ ரீதியில் பார்க்கையில் மிகவும் ஆபத்தானது. பான் மசாலா போன்ற விளம்பரங்கள் தடை செய்யப்படும் வேலையில், வெறும் பாக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தானதே!

என்னை மிகவும் பாதித்தது "energy drinks" விளம்பரங்கள் தான். மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தவை என்ற கூற்றை வைத்துக்கொண்டு, இவர்கள் சொல்லும் பல விஷயங்கள் விஷமமானவை. DHA எனப்படும் வஸ்து அடங்கிய பானங்களை பருந்தினால், மூளை சுறுசுறுப்பாகி, குழந்தைகள் இஞ்சினியராகவோ, டாக்டராகவோ ஆக்கிவிடுவார்கள் என்று மார்க்கெட் செய்கிறாற்கள். மருத்துவ ஆய்வுபடி, மூளை வளர்ச்சிக்கு கொழுப்புச்சத்து அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், DHA என்பது தாய் பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒரு சத்து. மேலும், சில ஆய்வுகளில், DHA supplements சாப்பிட்ட 0- 12 மாதக் குழைந்தைகள் 18 மாதத்தில் மற்ற குழந்தைகளை விட சற்றே அதிக IQ பெற்றார்கள் என்பது தான் உண்மையே தவிர, அவர்கள் பிற்காலத்தில், நோபல் விருது வங்கினார்கள் என்று எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை.

எனக்கு தெரிந்த வீட்டில், பையன் சரியான மதிப்பெண் பெறாத போது, அவனுடைய பெற்றோர், 'நான் உனக்கு என்னவெல்லாம் வாங்கித் தருகிறேன், ஆனாலும் உன் மதிப்பெண் மட்டும் உயரவேயில்லை' என்று திட்டித் தீர்ப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். குழந்தைகளின் படிப்புக்கு அயராத உழைப்பும், பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் ஊக்கமும் தான் முக்கியமே தவிர, அவர்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்களின் கொழுப்புச் சத்தின் அளவு மட்டுமல்ல!

இதை விட மிக முக்கியமான விஷயம்: "chocolate " விளம்பரங்கள்! "childhood obesity" அதிகமாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், பெற்றோர்கள் கொழுப்புச் சத்து நிறைந்த பண்டங்களை அளவோடு தான் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

இதை விட, அழகுப் பொருட்களின் விளம்பரங்களும் கொஞ்சம் கிழ்த்தரமானவை தான். உதாரணத்திற்கு, பெண் பார்க்கும் விளம்பரம் ஒன்று. சற்றே மானிற மேனி கொண்ட ஒரு பெண்ணை மாப்பிள்ளை வேண்டாம் என்ரு சொல்ல, cream ஒன்றை போட்டு, சருமம் மெறுக்கேறி, திருமணம் நிச்சயிக்க படுகிறதாம். இதை விட ஒரு discriminatory விளம்பரத்தை நான் பார்த்த்தில்லை!

நம் நாட்டை இன்னும் சில ஆண்டுகளில் ஆட்டிபடைக்கப்போகும் AIDS பற்றிய விழிப்புணர்ச்சி விளம்பரங்கள் மிகவும் குறைவு.

தொலைக்காட்சி நிறுவனங்களும் விளம்பரதாரர்களும் கவனிப்பார்களா???




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

இந்த மணப்பெண் விவகாரத்தைக் குறித்தும் விளம்பரங்களின் கீழ்த்தரமான பெண்ணியல் கருத்துக்களையும் பற்றி பத்ரி முன்பொரு முறை எழுதியிருக்கிறார். நுகர்வோர் விழிப்புணர்வு மேம்படும் என எதிர்பார்ப்போம்.

2:29 PM  

Post a Comment

<< Home

Counter